Notice
Inspire Award - 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 5 மாணவ/மாணவிகள் வரை விண்ணப்பிக்கலாம் ....விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ...(முழு விவரம்)
இன்ஸ்பையர் அவார்டு குறித்து ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற (Webex Meet)
நிகழ்நிலை கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்.பள்ளி மாணவர்களின் அறிவியல்
ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் இந்திய அறிவியல்
தொழில் நுட்பத்துறை 2008 முதல் இன்ஸ்பையர் விருது வழங்கி வருகிறது.
2016 முதல் இந்த விருது புத்தாக்க அறிவியல் ஆய்வு (மானக்) என்ற பெயரில்
வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் இன்ஸ்பயர் மானக் விருதுக்கு பதிவுகள்
துவங்கிவிட்டது. கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக கூறப்பட்டுள்ளது
இந்தமுறை 5 மாணவ / மாணவிகளின் பெயரை பதிவு செய்யலாம். ஆறு முதல்
எட்டாம் வகுப்பு வரை உள்ள எந்த வகுப்பில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஐந்து
மாணவர்களின் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வகுப்பில் இத்தனை
மாணவர்கள்தான் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு மாணவனின்
படைப்பும் தனித்தனியாக இருத்தல் அவசியம்
2 (அ) 3 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு படைப்பை தர அனுமதி இல்லை.
குழு செயல்பாடு இல்லை. அவ்வாறு ஒரே கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட
மாணவர்களுக்கு கொடுத்து பதிவு செய்தால் உங்கள் பதிவு நிராகரிக்கப்படும்
இந்த முறையும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு தலா பத்தாயிரம்
(10000/_) ரூபாய் வழங்கப்படும்.கடந்த காலங்களில் விண்ணப்பிக்கும்
அனைவரும் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொகை கொடுக்கப்பட்டது.
ஆனால் , இந்த முறை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு
மட்டுமே தொகை வழங்கப்படும்.
அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார். மாவட்ட
அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலும்,
தேசிய அளவிலும், கண்காட்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் தேசிய
அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் படைப்புகள் தொழில்
முனைவோரின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு
கொண்டு வரப்படும் இது தொடர்பாக மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று தன் படைப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் ஜப்பான் நாட்டிற்கு நமது மாணவர்கள் சென்று
வந்துள்ளனர்.
இன்ஸ்பயர் அவார்டு க்கு படைப்புகளைத் தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள
வேண்டிய முக்கிய அம்சங்கள்
Novelty - புதுமையான படைப்புகள்
இருத்தல்
தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்
தவிர்க்கவேண்டிய படைப்புகள்
உணவு சங்கிலி, கார்பன், நீர் சுழற்சி
மேற்கூறிய தலைப்புகளில் உள்ள படைப்புகள் இருப்பதை தவிர்க்கலாம்.
இருந்தால் நிராகரிக்க படுவீர்கள்.
பதிவு செய்யும்போது U Dise code பயன்படுத்தவும்
செய்யவும் கூடாது
அவசியம். மேலும் வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்த்து பதிவு செய்யவும்,
மாணவனின் பெயர் வங்கி கணக்கு (passbook) புத்தகத்தில் உள்ளது போல் பதிவு
செய்தல் மிகவும் அவசியமானதும் முக்கியம் வாய்ந்ததாகும்
பயன்படுத்தி பதிவு செய்யவும்.
பள்ளிகள் திறந்த பிறகு இன்ஸ்பையர் அவார்டு மாணவர்களை தேர்வு செய்யக்
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யோசனை போட்டி நடத்துதல்
என்ற யோசனை கேட்கவும்
அப்படிப் பெறப்பட்ட யோசனைகளில் புதுமையான ஒரு கருவி , ஏற்கனவே உள்ள
கருவியில் ஒரு மேம்பாடு செய்தல், நிகழ்காலத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கு
தீர்வாக அமையும் யோசனைகளை தேர்வு செய்யவும் அனைத்து
யோசனைகளையும் சேகரித்த பின்பு தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும்
கலந்து ஆலோசித்து சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்
Comments