பள்ளி ஆண்டு விழா 2018


                 பரங்கிப்பேட்டைஅருகே உள்ள கொ.பஞ்சங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரினா ஜெயமோகன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கந்தசாமி பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். முன்னதாக பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் நடராஜன் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து வகுப்பில் சேர்த்துக்கொண்டார். விழாவில் கிராம தலைவர் பரமசிவம், நிர்வாகிகள் அருமைக்கண்ணு, செல்வநாதன், மணிகண்டன், ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Comments