நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி
நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி
👉இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் தனிநபர்கள் (இன்டிவிடுவல்), முன்னாள் மாணவர்கள் (பழைய மாணவர்கள்/பழைய மாணவர் சங்கம்) வழங்கும் நிதி மற்றும் குறு/பெறு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு) போன்ற எவ்வகை நிதி/ ரொக்கம், பொருட்கள் மற்றும் சேவைகள் அளிக்கப்பட்டாலும் அது *நம்ம பள்ளி - நம்ம ஊரு பள்ளி* இணையதளம் https://nammaschool.tnschools.gov.in/#/ மூலமாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.நேரடியாக பள்ளிக்கு எதுவும் பெறக் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
*ஒவ்வொரு கிராமத்தில் உள்ள பள்ளியின் தேவைகளும் பூர்த்தி செய்ய முன்னாள் மாணவர் அமைப்பின் மூலமாக ஒரு குழு அமைக்கப்பட்டு, தங்களால் இயன்ற நிதி உதவி,திறன் மேம்பாட்டு உதவி அல்லது புதிய தொழில்நுட்பங்களை கற்பித்தல் போன்ற பங்களிப்புகளை அளிக்கலாம்*
👉 நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் வாயிலாக நமது கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அனைவரும் மேலே உள்ள இடுகையின் மூலம் உறுப்பினராக சேரும்படி பள்ளி தலைமை ஆசிரியரால் கேட்டுக் கொள்ளப்படுகிறது
Comments