இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 (GSAT-7R – நாளை விண்ணில் பாய்கிறது
இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் சிஎம்எஸ்-03 (GSAT-7R) நவம்பர் 2ஆம் தேதி மாலை 5.26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
இது இந்திய கடற்படை மற்றும்
பாதுகாப்புத்துறை தொடர்பு சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தொடர்பு செயற்கைக்கோள்
ஆகும்.
முக்கிய தகவல்கள்:
- செயற்கைக்கோள்
பெயர்: சிஎம்எஸ்-03 (GSAT-7R)
- எடை:
4,410 கிலோ
- பாதை: குறைந்தபட்சம் 170 கிமீ முதல் அதிகபட்சம் 29,970
கிமீ வரை புவிவட்டப் பாதை
- பயன்: கடற்படை கப்பல்கள், விமானங்கள் இடையிலான
பாதுகாப்பான தொடர்பு மற்றும் கண்காணிப்பு சேவைகள்
- முக்கிய
நோக்கம்: இந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல்
- மொத்த
செலவு: சுமார் ₹1,600 கோடி
- ராக்கெட்:
LVM3 (GSLV Mk-III)
- இடம்: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம்
- இது:
LVM3 ராக்கெட்டின் 7வது ஏவுதல் திட்டம்
- இதற்கு
முன் சந்திரயான்-3 இதே
ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
இன்றே மாலை 5.30 மணி அளவில் 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது இறுதி கட்ட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்
Comments