இலக்கிய மன்ற போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராக நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வரும் மாணவி ராகவி. இவர் கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்.

இதில் அவர் 6 மற்றும் 7ம் வகுப்பு பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியர் (பொறுப்பு)அருள்வடிவேலன், ஆசிரியர்கள் ஜெயக்குமார், அருள்மேரி, மார்க்ரெட், ராஜலட்சுமி, சக்திபிரியா மற்றும்பெற்றோர்கள் மாணவ மாணவியர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

நன்றி : தினமலர் நாளேடு 

Comments